The changing times in cinema and unchanging society

போன நூற்றாண்டில தேவர்மகன், எஜமான், நாட்டாமை, சின்ன கவுண்டர் மத்தியில "பாரதி கண்ணம்மா" ன்னு ஒரு படம். சாதி அவலத்தை முன் வச்சி எடுத்த பாராட்டு வாங்கின படம் எடுத்த சேரன இன்னிக்கு பா.இரஞ்சித்த திட்டுற அளவு யாரும் திட்டுனது இல்லை. ஏன்?
பதில் அந்த படத்திலயே இருக்கு. வாங்க பாப்போம்
ஆதிக்க சாதி மனப்பான்மைய ஒப்புக்கு கூட கேள்வி கேக்காம ஆண்ட பரம்பரை பெருமைய சொறிஞ்சுவிட்டு பட்டியலினத்தவர இவங்க தான் அரவணைப்பு பாதுகாக்கிற மாதிரி பெருமை பேசுற சீன் இருக்கும். ஏதோ ஒருத்தன் தப்பு செஞ்சதாவும் அத தட்டி கேக்கிற நல்லவர் இவங்கன்னு சித்தரிப்பு இருக்கும்
ஏன் இந்த கூட்டத்துக்கு மட்டும் நிலம் இருக்கு, மத்தவங்க கிட்ட நிலம் இல்லை, ஏன் கைய கட்டிகிட்டு நிக்கனும், ஏன் இவங்கள எதிர்பார்த்தே நம்ம வாழ்க்கை இருக்குன்னு எந்த ஒரு கேள்வியும் கேக்காது படம்.ஆனா இரஞ்சித் படத்தில் அந்த கேள்வி தான் பிரதானம்.
அங்க ஆரம்பிக்குது இரஞ்சித் மேல் வெறுப்பு
கதாநாயகனோ சமூகத்தில் தனக்கு கொடுக்கப்பட்ட இடத்தை எந்த கேள்வியும் கேக்காம, தனக்கு வாய்த்தது இதுதான், கூலிக்கு விசுவாசமா இருப்போம்னு சுயமரியாதைய தினசரி வாழ்க்கை பிரச்சினைய சமாளிக்க அடகு வைக்கிற நிலைமைல தான் இருக்கும்
பா.இரஞ்சித் இத மொத்தமா மாத்தியாச்சு
"கால் மேல் கால் போடுவேன் டா கெத்தா"
"நான் முன்னுக்கு வரதுதான் பிரச்சினைனா நான் முன்னுக்கு வருவேண்டா கெத்தா ஸ்டைலா" ன்னு வசனம் வச்சி 2000 வருச அடக்குமுறைக்கும் 70 வருச சினிமாக்கும் சவால் விட்டார். சமத்துவ வெறுப்புக்கு பத்தி எரிய ஆரம்பித்தது.
படத்துல ஒரு போராளி பாத்திரம் வரும். Incidentally அந்த நடிகர் பேர் இரஞ்சித். மாயி உரிமைக்கு போராடனும்னு பேசுனா அதைவிட 3 வேளை சாப்பிட்டு உயிர் வாழ்றதே பெரிசுன்னு விட்டேத்தியா அடக்குமுறை எதிர்க்காத கேரக்டர் தான் "பாரதி" என்னும் கதாநாயகன். எதிர்க்கும் மாயிக்கு side character தான்.
பா.இரஞ்சித் படத்தில நீலமும், சிவுப்பும், கருப்பும் தெறிக்கும் மாயி தான் கதாநாயகன். பாரதிகள் கூட்டத்தில ஒருத்தர் தான். தன்னோட அதிகாரத்தோட‌ ஆணிவேர அசச்சு பாக்கிற இரஞ்சித் மேல எரிச்சல் வராமலா இருக்கும் தந்தூரி அடுப்பில பிறந்தவங்களுக்கு!!
இயற்கையா ஏற்படும் காதல் நிறைவேறாதுன்னு தற்கொலை பண்ணிக்கும் கதாநாயகி. எதையுமே எதிர்க்காம குற்ற உணர்ச்சில தானும் நெருப்பில விழுந்து சாகும் கதாநாயகன். இப்படி இரண்டு பேர் செத்தா தான் மனசு மாறுவேன்னு காத்திருக்கும் ஊர் பெரிய மனுசன். இந்த மனசு மாறுவது கதைல தான் நடக்கும்
நிஜத்தில பெத்த பொண்ணா இருந்தாலும் வெட்டி கொல்வாங்க. ஆனாலும் சில பேர் பெத்தவங்க மனசு கோணக்கூடாதுன்னு எதிர்கீச்சு போடுவாங்க. பொண்ணு மண்ணும் ஒன்னுன்னு பொண்ண தன்னோட அதிகாரத்தையும் சொத்தையும் காத்துக்கிடும் ஒரு பொருளா எந்த சுயமும் இல்லாம இருந்த பெண் கதாபாத்திரங்கள் மத்தியில்
Independent single mom, போலீஸ் அவன் லட்டிய உருவி அடிக்கிற புயல் முன் வச்சி பெண் விடுதலையே சாதி விடுதலைன்னு தூக்கி பிடிச்ச இரஞ்சித் பார்த்து காட்ட வித்து கள்ளு குடிச்சவிங்களுக்கு ஆசனவாய் எரியிறது இயற்கையே
இப்படியாக நம்ம பாண்டா @itisprashanth வருத்தப்பட்ட மாதிரி இதுக்கு முன்னாடி வந்த படங்கள் எந்த குற்ற உணர்ச்சியும் சாதி பேர சொல்லி கொலையும், கற்பழிப்பும் பண்ணவங்களுக்கு ஏற்படுத்தல. Just like that இரண்டு மணி நேரம் பாத்துட்டு அச்சச்சோ பாவம்னு உச்சு கொட்டிட்டு அவங்க comfort zone
விட்டு துளி கூட அசையாம அப்படியே போய்டுவாங்க. சமூகத்தில் திரைய தாண்டி எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாத காந்திய வழி சினிமாக்கள் இது. இரஞ்சித் தான் பெண்ணடிமைத்தனத்த, சாதிக்கு பின்னாடி இருக்கும் ஆணாதிக்கத்தை, உழைப்ப சுரண்டும் முதலாளித்துவத்தன்னு எல்லாரையும் நிப்பாட்டி என் உரிமை எனக்கு கொடுன்னு கேள்வி கேக்க வைச்சார். கேள்வி கேக்கிறவங்க மேல அந்த கேள்வி பாயுற பேண்ட சாதிக்கு கோபம் வருது
ஆதிக்கம் பண்ணி பழகுனவன் அதிகாரத்தை விட்டு கொடுத்ததா சரித்திரம் இல்லை. உரிமை வேணும்னா போராடனும் அதுக்காக "கற்பி, ஒன்று சேர், கலகம் செய், அடங்க மறு, அத்து மீறு" அழுத்தி சொல்றப்போ சில தேவராட்டமும், திரௌபதியும் வரும். வாங்க அதுகள பெருக்கி குப்பைல போடுறதுதான் நம்ம கடமை #jaibhim
link 
https://twitter.com/subbu_q/status/1213466126316761089?s=20

Comments

Popular posts from this blog

குறுந்தொகை பாடல் 147

பாக்கியசாலி