Asuran James H.A. Tremenheere and the rights he gave to Dalits

இவர் யார்? இன்றைய "அசுரனுக்கு" உரிமையை கொடுத்தவர்.
இவர் தான் James H.A. Tremenheere
1891 பிரிட்டிஷ் அரசில் மெட்ராஸ் மாகாணத்தில் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியராக, இரண்டாயிரம் ஆண்டு கொடுமையை தீர்க்க 12 லட்சம் ஏக்கர் பஞ்சமி நிலத்தை பஞ்சமர்களுக்கு கொடுக்க சட்டம் இயற்றிய மாமனிதர்.
1873 இல் ICS அதிகாரியாகி 1878 மெட்ராஸ் மாகாணத்தில் சேர்ந்தார். சாதியற்ற மனிதனல்லவா இங்கே சாதியின் கோரமுகம் செய்யும் கொடுமையால் பஞ்சமர் எனப்படும் பறையர் மற்றும் பள்ளர்களின் இழி நிலை கண்டு அதை மாற்ற முனைந்தார். பிரிட்டிஷ் அரசுக்கு விரிவான ஆய்வறிக்கை அனுப்பினார்
அவருடைய Notes on Pariah of Chengelpet. அவர்கள் எப்போதும் பட்டினியோடு , அழுக்கு ஆடைகளோடு, கல்வியின்றி, பன்றிகளை போல வேட்டையாடப்படுகின்றனர். பிரிட்டிஷ் அரசு சட்டத்தின் மூலம் அடிமைத்தனத்தை அகற்றினாலும் சமூகத்தில் அடிமைகளாகவே உள்ளனர்
இந்த அறிக்கை May 16,1892 பிரிட்டிஷ் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு Depressed class land act 1892 என 30.9.1892 அரசாணை 1010/1010A மூலம் 12 லட்சம் ஏக்கர் நிலம் அன்றைய மெட்ராஸ் மாகாணத்தை உள்ளடக்கிய தமிழ் நாடு , ஆந்திரா , கர்நாடக பகுதியில் பஞ்சமர் எனும் பறையர், பள்ளர்களுக்கு
பஞ்சமி நிலமாக வழங்கும் சட்டமாக நிறைவேற்றப்பட்டது. இது தலித் மக்களின் சமூக பொருளாதார நிலை உயர விதைக்கப்பட்ட முக்கியமான விதை
James H.A. Tremenheere தன் அறிக்கையில் பிராமணர்களும், வெள்ளாளர்களும், வன்னியர்களும் சேரிகளை ஆக்கிரமிப்பதை கண்டித்து " பிரிட்டிஷ் அரசு அனுமதித்த மரபுவழி பழக்கங்கள் இன்று காலத்திற்கு ஒவ்வாத புதிய அடிமைத்தனத்தை உருவாக்கிவிட்டது" என்று சாடுகிறார். Tremenheere மட்டுமல்ல அவருக்கு முன்பு கிருத்துவ மிஷினரிகள் Rev. William Goudie and Rev. Adam Andrew ,பண்ணையாட்களாக தலித் மக்கள் நிலத்தோடு சேர்ந்து வாங்கி விற்கும் ஒரு பண்டமாக இருந்ததை ஆவணப்படுத்தியுள்ளனர்.(எச்ச ராஜாக்கள் கிருத்துவ மிஷினரிகளை எரிச்சலோடு பார்க்க இதுவும் ஒரு காரணம்)
James H.A. Tremenheere எதிர்ப்புகளோடு, ஒத்துழைப்பும் இல்லாத போதும் சேரிகளை தானே நேரில் சென்று ஆய்வு செய்து விரிவான ஆய்வறிக்கை செய்து நிலம் மட்டுமல்லாது இலவச வீடு, இலவச பள்ளி கல்வி , உதவித்தொகை அளிக்கவும் பரிந்துரை செய்துள்ளார்.( மனசார சொல்றேன் நீதான்யா மனுசன்🙏🙏)
இயற்றிய சட்டம் பத்து ஆண்டுகள் வரை பஞ்சமி நிலத்தை பிறருக்கு கொடுக்க தடை ,அத்துடன் பத்து ஆண்டுகளுக்கு பின்னும் நிலத்தை ஏனைய பஞ்சமர்களுக்கு மட்டுமே விற்க முடியும் என்ற சட்டப்பாதுகாப்பு கொடுக்கப்பட்டது.
ஆனால் இவை பெயரளவில் மட்டுமே உள்ளது
K.Chandru 2007 ஆம் ஆண்டு தன் தீர்ப்பில் தலித்துகளிடம் இருந்து அவர்கள் நிலம் பிரிக்கப்பட்டால் அதை மறுபடியும் மற்றொரு தலித்துக்கே அரசு திரும்ப கொடுக்க வேண்டும் என்று கூறி உள்ளார். 1979 updated registry scheme நில ஆவணங்கள் சரியாக இல்லாததால் படிப்பறிவில்லாத ஏழைகளின் உரிமையை பறிக்கும் விதமாகவே முடிந்தது. நில உச்சவரம்பு சட்டங்களும் பெரிய பயன் தராது ஆதிக்க சாதிகளிடம் நிலம் சேர்வதை தடுக்க தவறியது
இதுவரை தமிழ் நாட்டில் 116392 ஏக்கர் மட்டுமே பஞ்சமி நிலமாக அடையாளம் காணப்பட்டுள்ளது. இவற்றில் 16018 ஏக்கர் தலித் அல்லாதோரிடம் இருப்பதாக தகவல் கூறுகின்றன. தகவலறியும் சட்டத்தின் கீழ் கிடைத்த தகவல்கள் பல முரண்களோடு இருப்பது நில ஆவணங்கள் சரியாக இல்லாதை உறுதி செய்கின்றன. K. Meyyar CPI Madurai முயற்சியால் மதுரை மாவட்டத்தில் ஆக்கிரமிப்பில் உள்ள 2843 ஏக்கர் நிலம் அடையாளம் காணப்பட்டுள்ளது. அது போலவே TNUEF, National Federation for Dalit Land Rights Movement (NFDLRM) போன்ற பல இயக்கங்கள் பஞ்சமி நில மீட்புக்காக போராடி வருகின்றனர். இறுதியாக James H.A. Tremenheere கனவு இதுதான்.
சிறிது நிலம், இருக்க சொந்தமான வீடு, எழுத்தறிவு, தன் உழைப்பை எங்கு செலுத்தலாம் என்று தானே முடிவெடுக்கும் உரிமை, இதனால் உருவாகும் சுய மரியாதை இவை இருந்தால் வருங்காலத்தில் இவர்கள் நிலை முன்னேற்றம் வரும்.
கனவு மெய்ப்பட வேண்டும்

https://twitter.com/subbu_q/status/1181093420003028992?s=20

Comments

Popular posts from this blog

குறுந்தொகை பாடல் 147

பாக்கியசாலி