2G scam economic reality o losses

1,76,000,0,00,00,000 மொத்தம் பதினொரு சைபர். இந்த நம்பர் தான் இந்தியாவ இந்து தேசமா மாத்த காத்திருந்த RSS க்கு மோடிய தூக்கி விட கிடைச்ச மிக முக்கிய துருப்பு சீட்டு. இன்னிக்கு 7 லட்சம் கோடி கடனோட பல தொலைதொடர்பு நிறுவனங்கள் திவாலாக போட்ட பிள்ளையார் சுழி 2G.
ஒரு உதாரணம்.
ஊருக்கு வெளிய ஒதுக்குபுறமா சல்லீசா பொட்டல் காடு வாங்கிறீங்க. அப்புறம் அந்த இடத்துக்கு நேர் எதிரவே அரசு ஒரு புது bus stand கட்டி எல்லா பஸ்ஸும் அங்க விடுதுன்னு வைங்க உங்க நிலத்தோட விலை எகிறிடும். இப்ப முதல் owner வந்து நீ என்ன ஏமாத்தி கம்மி விலைக்கு வாங்கிட்டேன்னு
சொன்னா உங்களால ஏத்துக்க முடியுமா. நிலத்தோட மதிப்பு அதன் பயன்பாடு அதுல வரும் இலாபத்த வச்சித்தான இருக்கும். 2g Vs 3g இப்படித்தான். 2007 2g க்கும் 2010 3g க்கும் நடுவுல உலகமும் இந்தியாவும் பல பெரிய மாற்றங்கள் வந்திச்சு. என்ன மாற்றம்? வாங்க பாப்போம்
2008ல ஆப்பிள் iPhone 3g விக்க ஆரம்பிக்கும் போது தான் நாம இங்க 2g சேவையே ஆரம்பிக்கோம். 2008 ல recession. உலக பொருளாதாரமே மொத்தமா படுத்துக்குது ஆனா இந்தியாவ Manmohan steady ஆ இழுத்துட்டு போறாரு. எல்லா பெரிய consulting companys India is most favourite investment destination ங்கிது
2007ல 165 million இருந்தது 2g கம்மி விலைக்கு முடிஞ்ச ஒரே வருசத்துல 265 million ஆ மாறுது. கட்டணம் குறைய எல்லார் கைலயும் செல்போன் வருது. இது 100 கோடி ஆகும் பெரிய இலாபம் பாக்கலாம்னு
11 billion invest பண்ணி Vodafone இந்தியா உள்ள நுழையுது. Docomo, uninor, Etisalatன்னு ஊருல இருக்குற எல்லா பெரிய தலைகளும் ok invest பண்ணலாம்னு அள்ளி போட்டு பெட்டிய தூக்கிட்டு வராங்க
அரசாங்கமோ recession சமாளிக்க பண்ண fiscal stimulus னால fiscal deficit ஏகத்துக்கும் கூட, வருமானத்தை பெருக்க முன்ன மாதிரி இல்லாம 3g ஏலம் விடலாம்னு முடிவு பண்ணுது. 34 நாள் ஏலம் நடக்குது. இந்த 3g விலைய தான் 2g கூட கம்பேர் பண்ணி வருமான இழப்பு ன்னு Vinod Rai கணக்கு எழுதிறாரு. உலகமே 3g க்கு போகும் போது 2g வாங்க இத்தனை கம்பெனியும் கிடையாது வாங்கிறவன் கிட்ட இவ்ளோ காசுகிடையாது அப்புறம் எப்படி அவ்ளோ விலைக்கு வித்திருக்கும்னு சொல்ல முடியும். ஆனா Vinod Rai அப்படி கணக்கு எழுதி Banks Board Bureau க்கும் CoA க்கும் தலைவர் ஆனார். (indiatoday.in/sports/cricket…) அடுத்த குற்றச்சாட்டு cutoff date மாத்திட்டார் A.இராசா. 1800 -1900MHz ல 5 MHz band ஒரு கம்பெனிக்குன்னு வச்சிகிட்டா மொத்தமே 20 கம்பெனிக்கு தான் கொடுக்க முடியும். First come first serve policy ல 20 வது கம்பெனி apply பண்ண date cutoff 5-6 நாள் முன்னாடி மாத்தினாரு. பழைய cutoff இருந்தாலும் apply பண்ண எல்லாருக்கும் கொடுத்திருக்க முடியாது ஏன்னா spectrum is finite source. மாத்தினதால பெரிய நஷ்டம்லா இல்லை
அதெல்லாம் இல்லை spectrum ஏலம் வச்சிருக்கனும்னு சொன்னா அதுக்கடுத்து நடந்த almost எல்லா ஏலத்திலயும் target miss தான் ஆகிருக்கு. எதிர்பார்த்த அளவுக்கு spectrum வித்து வருமானம் வந்ததில்லை (livemint.com/opinion/column…)
ஏன்னா உலகத்திலேயே அதிகமா spectrum charge வாங்கிற நாடுகள்ல நாமும் ஒன்னு அத்தோட கம்மியான call rate வச்சிருக்கிறதும் நாம தான். பின்ன எப்படி இலாபம் வரும் நஷ்டமாகி non performing asset ஆகவும் stressed asset ஆகவும் தான் மாறும். (livemint.com/Industry/JJtrg…) இது எல்லாத்துக்கும் மேல அதிக விலைக்கு spectrum வித்தா அந்த காச கட்ட போறதும் நீங்க தான். எப்படின்னு கேட்கிறீங்களா ?
ஏன்னா ஒவ்வொரு கம்பெனியும் கவர்மென்ட்டுக்கு கொடுக்க வேண்டிய காசு அவ்ளோ இருக்கு. மொத்த வருமானத்தில(note not on profit)3-8% Adjusted Gross Revenue spectrum usage charge
கொடுக்கனும். அது போக universal service obligation fund ன்னு ஒன்னு தரனும். அப்புறம் வாங்கின கடனுக்கு வட்டி தரனும். 30% லாபத்தில corporate tax வேற கட்டனும். இப்படி போச்சின்னா அவனுக்கு என்னா மிஞ்சும் எப்புடி தொடர்ந்து new investment வரும்.aircel to Vodafone (thehindubusinessline.com/info-tech/voda…)
எல்லாம் கடைய சாத்திட்டு தான் போகனும் India won't be a favourite investment destination anymore. ஆனா அது நம்ம banking sector தான் பாதிக்கும். உங்க சேமிப்பு எல்லாம் ஸ்வாகா ஆகும். ஏன்?
ஏன்னா வங்கில உங்க சேமிப்பு தான் கடனா இந்த கம்பெனிக்கு எல்லாம் போயிருக்கு. அத வச்சி வியாபாரம் பண்ணி
தான் அந்த வட்டி கொடுக்கனும் கடன அடைக்கும். அத தான் உங்க வங்கி உங்க சேமிப்புக்கு வட்டி தரும்.stressed asset ஆகி NPA ஆச்சுன்னா நஷ்டம் உங்களுக்கு தான். Bank boards bureau Vinod Rai select பண்ண PSU bank chairman வங்கி கடன தள்ளுபடி பண்ணிட்டு reliance க்கு ஜம்ப் (businesstoday.in/current/corpor…)
ஆக மொத்தம் spectrum அதிக விலைக்கு வித்தா bank and corporate ல இருக்கிறவன் காச உங்க பாக்கெட்ல இருந்து சுரண்டி எடுத்துட்டு இருக்குன்னு அர்த்தம்
இப்படி எல்லா company மூடின அப்புறம் jio Airtel மட்டும் தான் இருக்கும். விலை எவ்வளவு வேணா ஏத்துவாங்க. போட்டிக்கு ஆள் இலலாம ஒவ்வொரு அசைவும் சுலபமா மோடி surveillance பண்ணி எதிர்ப்பே இல்லாம எல்லா election ஜெயிப்பான்
பொருளாதாரம் வெறும் காத்து வித்து வரும் காச வச்சு நடத்த முடியாது. வெறும் spectrum charge காசு கரையாம அந்த காசு indigenous telecom equipments manufacturing, 4g 5g patents 10 nm 7nm chipset fabrication develop பண்ணவும் முதலீடு பண்ணி இருந்தா இவ்வளவு import (thewire.in/economy/worlds…)
பண்ணி trade deficit இவ்வளவு கூடி இருக்க தேவை இருக்காது.
வேலை வாய்ப்பு பெருகி இருக்கும். ஆக வேலையில்லாத இளைஞர்கள் வச்சி இந்துத்வா எனும் Orwellian dystopian state மோடி உருவாக்க போட்ட பிள்ளையார் சுழி தான் 2g. அது பெரிய scam ன்னு உங்கள நம்ப வைச்சது தான் உலகின் மிக பெரிய scam. அப்புறம் வினோத் ராய் மாதிரி நானும் தப்பா பதினொரு சுழியம்னு போட்டுட்டேன். பத்து தான் வரும். 1,76,000,00,00,000 தான் சரி.

Comments

Popular posts from this blog

குறுந்தொகை பாடல் 147

பாக்கியசாலி