Asuran James H.A. Tremenheere and the rights he gave to Dalits
இவர் யார்? இன்றைய "அசுரனுக்கு" உரிமையை கொடுத்தவர். இவர் தான் James H.A. Tremenheere 1891 பிரிட்டிஷ் அரசில் மெட்ராஸ் மாகாணத்தில் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியராக, இரண்டாயிரம் ஆண்டு கொடுமையை தீர்க்க 12 லட்சம் ஏக்கர் பஞ்சமி நிலத்தை பஞ்சமர்களுக்கு கொடுக்க சட்டம் இயற்றிய மாமனிதர். 1873 இல் ICS அதிகாரியாகி 1878 மெட்ராஸ் மாகாணத்தில் சேர்ந்தார். சாதியற்ற மனிதனல்லவா இங்கே சாதியின் கோரமுகம் செய்யும் கொடுமையால் பஞ்சமர் எனப்படும் பறையர் மற்றும் பள்ளர்களின் இழி நிலை கண்டு அதை மாற்ற முனைந்தார். பிரிட்டிஷ் அரசுக்கு விரிவான ஆய்வறிக்கை அனுப்பினார் அவருடைய Notes on Pariah of Chengelpet. அவர்கள் எப்போதும் பட்டினியோடு , அழுக்கு ஆடைகளோடு, கல்வியின்றி, பன்றிகளை போல வேட்டையாடப்படுகின்றனர். பிரிட்டிஷ் அரசு சட்டத்தின் மூலம் அடிமைத்தனத்தை அகற்றினாலும் சமூகத்தில் அடிமைகளாகவே உள்ளனர் இந்த அறிக்கை May 16,1892 பிரிட்டிஷ் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு Depressed class land act 1892 என 30.9.1892 அரசாணை 1010/1010A மூலம் 12 லட்சம் ஏக்கர் நிலம் அன்றைய மெட்ராஸ் மாகாணத்தை உள்ளடக்கிய தமிழ் நாடு , ஆந...