Posts

Showing posts from October, 2021
அவளின் அன்றைய தினத்தின் நிகழ்வுகள் அறிய  முதல் நாள் பள்ளி சென்று வந்த பிள்ளை கூறும் மழலை கதை கேட்க காத்திருக்கும் தாய் போல் காத்திருந்தேன்  குழி தோண்டி புதைத்து விட்டேன் என் நினைவை என்று அவள் கூறியதை மறந்து விட்டு  ....  

பாக்கியசாலி

ஏதோவொரு மாலை நேரத்தில் சாலையோர பானிபூரி கடையில் இங்கு கட்டமைக்கப்பட்ட எந்தவொரு அழகின் இலக்கணத்திற்கும் அடைபடாத   ஒரு பெண்ணின் கலைந்த கூந்தலின் வழியாக அவள் சொல்லும் சுவாரஸ்யமில்லாத கதைகளையும் இரசித்து கேட்டு அவள் அனுமதியுடன் அவள் அழகை இரசிக்க பெற்ற காதலன்  பாக்கியசாலி

miss you babe

முன் தினம் பெய்த பெருமழையில் குப்பைகளை விரட்டி மின்னிய சாலைகள் இன்று இயல்பு நிலைக்கு திரும்பியது ஆனால் எந்த பெருமழையிலும் அவள்  நினைவுகளை நான் விட்ட பாடில்லை  அவள் நினைவுகள் தான் என் இதயத்தில் மின்னும் ஒரே ஒளி என்பதால்...