சீமானியமும் மறைந்திருக்கும் பாசிசமும்.

 சீமானின் பேச்சில் உண்மைகளை குழி தோண்டி புதைக்கும் உணர்ச்சிகளே மிகுதியாக இருக்கும்

   சீமான் முதலமைச்சர் எனும் ஒற்றை நாற்காலியில் அனைத்து அதிகாரமும் இருப்பது போலவும் அதை தான் அடைவதொன்றே நாட்டின் அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வாகும் என்று கட்டமைக்கிறார்.

   சீமான், மோடி போன்றவர்களுக்கும் முசோலினி, ஹிட்லருக்கும் பெருமளவு ஒற்றுமை உண்டு. இவர்கள் அனைவரும் உணர்ச்சிகரமாக இன உணர்வையும் வெறுப்புணர்வையும் தூண்டியே அரசியல் செய்தனர்.
    
    பாசிசத்தில் வெறுப்புணர்ச்சியே அடிப்படை. ஹிட்லருக்கு யூதர்கள், BJP-RSS முஸ்லிம்கள் மீதும் வெறுப்பை உருவாக்கி அதன் மூலம் அரசியல் செய்கின்றனர்.

  சீமானியமும் வந்தேறிகள் என்று ஒரு சாராரை  நாட்டின் அனைத்து பிரச்சினைகளுக்கும் காரணமாக்கி அதன் மூலம் வெறுப்பரசியல் செய்கின்றனர். BJP முகலாய ஆட்சியை அவமானமாக கூறுவது போல நாயக்கர் ஆட்சியை சீமானும் குறை கூறுகின்றார்.

 தமிழகத்தில் 12 லட்சம் அரசு ஊழியர்கள்,12524 கிராம பஞ்சாயத்து, 561 நகராட்சி, 234 சட்ட மன்ற உறுப்பினர்கள் உள்ளனர். இவற்றில் உள்ள அனைவரும் வந்தேறிகள் அல்ல. இதில் உள்ள தமிழர்களின் ஒத்துழைப்புடனே ஊழலும் சுரண்டலும் நடக்கிறது. உங்கள் தெருவில் இருக்கும் லஞ்சம் வாங்கும் அதிகாரிகளையும் உங்கள் ஊரில் ஊழல் செய்யும் அரசியல்வாதிகளையும் கேள்வி கேட்காமல் ஒரு கற்பனையான எதிரியின் பின் உங்களை தள்ளும்.

 சமூகம் தன்னை பெருமளவு மாற்றாமல்  இவை அனைத்தையும் ஒருவர் முதலமைச்சர் ஆவதால் மட்டுமே மாற்றியமைக்க முடியும் என்று நினைப்பது சினிமாத்தனமானது.

Eric Frommன் Fear of Freedomல் ஹிட்லர் மோடி சீமான் போன்றவர்களை மக்கள் ஏன் தலைவராக தேர்ந்தெடுக்கின்றனர் என்பதை விளக்குகிறார். மனிதன் தனக்கிருக்கும் பாதுகாப்பின்மை உணர்வால் ஒரு strong leader என்று தான் நம்பும் ஒருவரிடம் அனைத்து பொறுப்புகளையும் கொடுத்து அவரை கண்மூடித்தனமாக ஆட்டு மந்தை போல பின்பற்றுகின்றனர். Strong leader என்று காமிப்பதற்காவே மோடி 56 இஞ்ச் அகல மார்பை காட்டுகிறார். அதுபோலவே சீமானும் தன்னை தலைவர் பிரபாகரன் அவர்களோடு இணைத்து காமிக்கின்றார். A.k 74 கதையும் இதன் தொடர்ச்சியே.
   
    பாசிசத்திற்கு  அனைத்து அதிகாரமும் தன்னகத்தே வைக்கும் முசோலினி, மோடி போன்ற Superman leader அடிப்படை. சீமானும் அந்த அச்சிலேயே உருவாகிறார்.

பாசிசம் creative destruction என்று கூறி தனக்கு முன்னிருந்த ஜனநாயக முறைகளை குறையாக கூறி அழித்தது. சீமானியமும் அவ்வாறே திராவிட இயக்கம் மீது அத்தனை பழிகளையும் ஏற்றி அழிக்க முயல்கின்றது. திராவிடத்தால் வீழ்ந்தோம் என்ற பரப்புரை செய்வது இதற்கே.

 பாசிசம்  palingenetic ultra nationalism உருவாக்கும் அதாவது ஹிட்லரின் ஆரிய இனப்பெருமை போல. BJP-RSS இந்து இராஷ்டிரா பெருமை பேசுவதும் இதே. சீமானியமும் கண்மூடித்தனமாக தமிழ் பேரினவாதத்தையும் அதை அழிக்க illuminati சதி உள்ளதாகவும் கூறி அச்சத்தை ஏற்படுத்தி அதன் மூலம் அரசியல் செய்யும். நாடும் இனமும் அழிந்து விடும் என்று சொல்லி அச்சத்தை விதைத்து கொண்டே இருப்பது இந்த நோக்கில் தான்.

 மக்களாட்சியில் வெறுப்புணர்வை தூண்டுவதால் தவறான வழிநடத்தலால் கும்பலாட்சியாக (mobocracy) மாறும் அபாயத்தை Ortega gasset's Revolt of Massesல் விளக்குகிறார்.

சேகுவேரா அர்ஜென்டினாவில் பிறந்தவர். க்யூபாவின் போராட்டத்தில் கலந்துகொண்டு அங்கு அமைச்சராக இருந்தவரை யாரும் வந்தேறி என்று புறந்தள்ளவில்லை. சேகுவேரா தென் ஆப்ரிக்காவிலும் பொலிவியாலும் போராடுகையில் அவரின் இன ஆராய்ச்சி செய்யவில்லை.

 இந்த பரந்த உலகம் எந்தவொரு தனி மனிதனுக்கோ ஓர் இனத்திற்காக மட்டுமே சொந்தம் அல்ல, உலகில் உள்ள அனைத்து உயிர்களுக்கும் பொதுவானது. பிறருக்கு இடைஞ்சல் இல்லாமல் வாழ அனைவருக்கும் உரிமை உண்டு.

வரலாறு தன்னை மறந்தவர்களை மறக்காமல் மீண்டும் வந்து நினைவுறுத்தி செல்லும். பாசிச முகங்களை அடையாளம் கண்டு தெளிவோம்.

Comments

Popular posts from this blog

குறுந்தொகை பாடல் 147

Kammatipaadam and Snowpiercer